பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தில் சிறு தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை பிணையில்லாக் கடன்.. என்னென்ன விதிமுறைகள்?!

 
மத்திய அரசு மோடி நிதியுதவி கடன் உதவித்தொகை

சுயதொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், பிணையில்லாமல் வழங்கப்படும் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத்துறை சார்ந்த சிறு நிறுவனங்கள் தங்களது தொழிலைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும் இத்திட்டத்தின் மூலம் எளிதாகக் கடன் பெறலாம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் வளர்ச்சி நிலைக்கேற்ப கடன்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன: புதிதாகத் தொழில் தொடங்குவோருக்காக ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

வட்டி முதியோர் முதலீடு கடன் உதவித்தொகை ரூபாய் ரொக்கம் பணம்

கிஷோர் பிரிவில் ஏற்கனவே தொடங்கிய தொழிலை மேம்படுத்தவும், மூலப்பொருட்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் ரூ.50,001 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். தருண் பிரிவில்  தொழிலை மேலும் விரிவுபடுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.5,00,001 முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தருண் பிளஸ் பிரிவில் கடன் வரம்பு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து புதிதாகச் சேர்க்கப்பட்ட இப்பிரிவின் கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும்.

புதிதாகத் தொழில் தொடங்குவோர் அனைவருக்கும் நேரடியாக ரூ.20 லட்சம் கடன் கிடைக்காது. முன்னதாக ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் பெற்று, அதனைச் சரியான முறையில் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோர்கள் மட்டுமே ‘தருண் பிளஸ்’ பிரிவின் கீழ் ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

பணம் ரொக்கம் போனஸ் ஊக்கத்தொகை உதவித்தொகை

உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத்துறை சார்ந்த சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இக்கடனைப் பெறலாம். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் இக்கடன் வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புவோர் ஜன்சமர்த்  இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

முத்ரா கடன்களுக்கு எவ்விதச் சொத்துப் பிணையமும் தேவையில்லை என்பது இத்திட்டத்தின் முக்கியச் சிறப்பாகும். கடன் வழங்கும் வங்கிகளின் விதிகளுக்கு உட்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். மேலும், கடன் வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் அணுகினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், உரிய வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.