UNION BUDGET 2023: ரயில்வேவுக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு; புதிதாக 50 விமான நிலையங்கள் !!

 
நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், பொதுப் போக்குவரத்திற்காக ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்குவதாகவும் அறிவித்தார். மேலும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும். விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.  

நிர்மலா சீதாராமன்

கிராமப்புற பகுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும். புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

From around the web