மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் இபிஎப் சேமிப்புக்கு 8.15 சதவிகிதம் வட்டி வழங்க !!

 
PF கணக்கு இருக்கா? டிசம்பர் 31-க்குள்ள இத கட்டாயம் செய்யணும்!


தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினர்களாக தனி யார் நிறுவன ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என இந்திய அளவில் 7 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய இபிஎப் சேமிப்புக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.இபிஎப் தொகையை அரசு பத்திரங்கள், சேமிப்பு திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் இபிஎப்ஓ முதலீடு செய்து, அதில் இருந்து கிடைக்கும் வருவாயில் தொழிலாளர்களின் சேமிப்புக்கு வட்டி வழங்கி வருகிறது.

widow pension scheme

இதற்கு முன், 2021-22ம் நிதியாண்டில் இபிஎப் சேமிப்புக்கு 8,1 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டது. இது 40 ஆண்டுகளில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச வட்டியாக இருந்தது. 1977-78ம் நிதியாண்டில் 8 சதவிகித வட்டி வழங்கப்பட்டது.தற்பொழுது குழு கூட்டம் மார்ச் 27, 28 தேதிகளில் நடந்தது. இதில், 2022-23ம் நிதியாண்டில் தொழிலாளர்களின் இபிஎப் சேமிப்புக் கான வட்டியை 0.05 சதவீதம் அதிகரித்து, 8.15 சதவீதம் வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட இபிஎப் வட்டிக்கு மத்திய நிதி அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.

Pensioners

இதைத் தொடர்ந்து, இபிஎப்ஓ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'தொழிலாளர்களின் இபிஎப் சேமிப்புக்கு 2022-23ம் நிதியாண் டில் 8.15 சதவிகிதம் வட்டி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே இபிஎப் கணக்குகளில் வட்டி செலுத்த மண்டல அலுவலகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது. தொழிலாளர்களின் இபிஎப் கணக்கு களில் 2022-23ம் நிதியாண்டுக்கான வட்டியாக மொத்தம் ரூபாய்  90 ஆயிரம் கோடி செலுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web