கோர விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்.. சுக்கு நூறாக சிதறிப் போன சொகுசு கார்!

 
ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள வை என்ற இடத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது.

சம்பவத்தன்று, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பயணித்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை (கன்டெய்னர் லாரி) டிரைவர் 'சடன் பிரேக்' போட்டார். இதன் விளைவாக, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

 இதன் காரணமாக கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் மோதியது. இந்த விபத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மற்றும் ஓட்டுநர் உட்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web