கிருஷ்ண ஜெயந்தி: மத்திய இணையமைச்சர் எல். முருகன் வாழ்த்து!
Sep 4, 2026, 11:45 IST
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி திருநாளை முன்னிட்டு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணையும் நன்னாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்தச் சிறப்புமிக்க நாளில் அனைவரது வாழ்விலும் ஒற்றுமை, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருகிட வேண்டும் எனப் பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பிரார்த்திப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
