கோமியத்தை ரூ.10-க்கு கொள்முதல் செய்ய உ.பி அரசு திட்டம்!

 
கோமியம்

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தவும், பசு மாட்டின் கோமியத்தை (மாட்டுச் சிறுநீர்) ஒரு லிட்டர் ரூ.10-க்கு கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 15 தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

கோமியம்

சுமார் 300 கிராமப்புறப் பெண்கள் இச்சேகரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோமியத்தைச் சேகரித்துத் தரும் பெண்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.2 கமிஷனாக வழங்கப்படுகிறது. சேகரிக்கப்படும் கோமியத்தைக் கொண்டு இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கட்டமைப்பின் வெற்றி மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து, இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் போது கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.20 ஆக உயர்த்தவும் அரசு பரிசீலித்து வருகிறது.