மனைவியை நாற்காலியில் கட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
உபி

 

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நாற்காலியில் கட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ததாகக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜகத்பூர் கிராமத்தைச் சேர்ந்த சோனம் (30) என்பவருக்கும், அவரது கணவர் சுக்பீர் சிங் என்ற மோனுவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சோனத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுக்பீர் சந்தேகித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சோனத்தை நாற்காலியில் கட்டி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், சோனம் உயிரிழந்துவிட்டார்.சம்பவத்துக்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்து சென்ற சுக்பீர் சிங்கை போலீசார் பின்னர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது