ATM-ல் டெபிட் கார்டு தேவையில்லை! UPI மூலம் ₹10,000 வரை பணம் எடுப்பது எப்படி?

 
யுபிஐ

 

ATM-ல் பணம் எடுக்க இனி டெபிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. UPI செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதி, இந்த சேவையை ஆதரிக்கும் ATM-களில் பயன்பாட்டில் உள்ளது.

யுபிஐ

இந்த முறையில், ATM திரையில் உள்ள ‘UPI Cash Withdrawal’ அல்லது அதற்கு இணையான விருப்பத்தைத் தேர்வு செய்து, எடுக்க வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் QR குறியீட்டை Google Pay, PhonePe உள்ளிட்ட ஆதரவு UPI செயலி மூலம் ஸ்கேன் செய்து, வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து UPI PIN-ஐ உள்ளிட வேண்டும். பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும் ATM-ல் பணம் கிடைக்கும்.

யுபிஐ

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை எடுக்கலாம். எனினும், தினசரி வரம்பு மற்றும் பரிவர்த்தனை எண்ணிக்கை வங்கியைப் பொறுத்து மாறுபடும். இந்த வசதி அனைத்து ATM-களிலும் கிடைக்காது என்பதால், UPI வசதி செயல்படுத்தப்பட்டுள்ள ATM-ஐ பயன்படுத்த வேண்டும்.