ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை!

 
upi

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் முக்கிய அடையாளமாகத் திகழும் யூபிஐ, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 30 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,451 கோடி முறை யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுப் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

upi

கடந்த ஜூலை மாதத்தில் 2,366 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளும், ஜூன் மாதத்தில் 2,320 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இதன் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

யுபிஐ

இந்தியாவில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ கட்டண முறை, நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்து டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது.