UPSC 2026 விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு - பிப்ரவரி 27 வரை விண்ணப்பிக்கலாம்!

 
 UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப்பணித் தேர்வு (IFS) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி நேற்றுடன்  நிறைவடைய இருந்த நிலையில், ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளால் விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடைசி தேதி பிப்ரவரி 27 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 27 மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் கடைசி நேரத்தில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தைப் பயன்படுத்த முயன்றதால் (Heavy Traffic), இணையதளம் செயலிழந்தது. இதனால் பலரால் விண்ணப்பங்களை முடிக்க இயலவில்லை.

upsc

இது குறித்து யூபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் தனது எக்ஸ்  தளத்தில், "தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன, தற்போது இணையதளம் சீராக இயங்குகிறது" என்று உறுதிப்படுத்தியுள்ளார். மே 24ம் தேதியும், முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 5 நாட்கள் என தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

UPSC Exam1

காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் இன்றே விண்ணப்பப் பணிகளை முடிப்பது சிறந்தது. இதன் மூலம் மீண்டும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பிப்ரவரி 27-க்குப் பிறகு விண்ணப்பங்களைத் திருத்திக் கொள்ள 'Correction Window' வசதி மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.