ரோட்டோரம் பைகளை வைத்துச் சென்ற யுபிஎஸ்சி தேர்வர்கள்!
சென்னையில் யுபிஎஸ்சி குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு மையங்களில் உரிய பாதுகாப்பு அறைகள் இல்லாததால் தேர்வர்கள் தங்கள் உடமைகளைச் சாலையோரத்தில் விட்டுச்செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு மையங்களுக்கு உள்ளே பைகள், கைப்பேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற எந்தவித உடமைகளையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

வெளியூர்களில் இருந்தும் தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் தேர்வு எழுத வந்த பல தேர்வர்கள், தங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைக்க மையங்களில் இடவசதி இல்லாத காரணத்தினால், மாற்று வழியின்றிச் சாலையோரங்களிலேயே தங்கள் பைகளை வைத்துவிட்டுத் தேர்வு எழுதச் சென்றனர்.
தேர்வு மையங்களுக்கு அருகில் வெளியூர்த் தேர்வர்களின் உடமைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான தற்காலிக அறைகள் அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேர்வு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் எதிர்காலத்தில் செய்து தர வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
