UPSC அறிவிப்பு.. 1358 காலி பணியிடங்கள்.. மார்ச் 31 கடைசி தேதி!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், நாடு முழுவதும் காலியாக உள்ள 1,358 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு (CMSE 2026) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,358 காலியிடங்கள் கீழ்க்கண்ட துறைகளில் நிரப்பப்பட உள்ளன.
மத்திய சுகாதார சேவையின் கீழ் வரும் பொது மருத்துவ அலுவலர்கள் (MO) - 864 இடங்கள், இந்திய ரயில்வேயில் உதவி கோட்ட மருத்துவ அலுவலர்கள் (ADMO) - 450 இடங்கள், டெல்லி மாநகராட்சியில் பொது மருத்துவ அலுவலர் (GDMO) - 14 இடங்கள், டெல்லி மாநகராட்சியில் உள்ள ஜெனரல் மருத்துவ அலுவலர்கள் (நிலை II) - 30 இடங்கள்.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2026 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரரின் வயது 32-க்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 56,100 மற்றும் இதர மத்திய அரசுப் படிகள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நேர்காணல் (ஆளுமைத் தேர்வு) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 11 மார்ச் 2026. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 மார்ச் 2026. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in வழியாக 'Careers' பிரிவில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
