தேர்வர்களே தயாராகுங்க... மே 25ம் தேதி 979 பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு !

 
யுபிஎஸ்சி


 
மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என  upsc.gov.in   இணையதளத்தில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 5 நாட்கள் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் யு.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979ஆக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

யுபிஎஸ்சி


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும்  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு மே 25ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலை தேர்வை பொறுத்தவரை காலை 9:30 முதல் 11:30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2:30 மணி முதல் 4:30 மணி வரை திறனறி 2 ம் தாள் தேர்வும் நடைபெறும். தேர்வு கூட்டத்திற்கு தேர்வர்கள் செல்ஃபோன்,  பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உட்பட  மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

யுபிஎஸ்சி


தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்   தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னல் முகவரி வைத்து மட்டுமே தேர்விற்கு விண்ணப்பிக்கமுடியும். தேர்வர்கள் ஆதார்அட்டை, சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தேர்வர்களின் கையெழுத்து, தேவையான சான்றிதழ்களை தேவையான அளவில் பென் டிரைவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். முதல்நிலை தேர்வுக்கு மொத்தம் 80 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web