UPSC வேலைவாய்ப்பு... டிகிரி முடித்தவர்களுக்கு 349 காலிப்பணியிடங்கள் - மார்ச் 12 கடைசி தேதி!

 
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு! தமிழகத்தில் இருந்து 40 பேர் தேர்வு!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் துணை ராணுவப் படைகளில் 'அசிஸ்டெண்ட் கமாண்டண்ட்' (Assistant Commandant - Group A) பணிக்கான 2026-ஆம் ஆண்டு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வின் மூலம் பி.எஸ்.எப் (BSF), சி.ஆர்.பி.எப் (CRPF), சி.ஐ.எஸ்.எப் (CISF), ஐ.டி.பி.பி (ITBP) மற்றும் எஸ்.எஸ்.பி (SSB) ஆகிய படைகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

வேலை வாய்ப்பு

பி.எஸ்.எப் (BSF): 108, சி.ஆர்.பி.எப் (CRPF): 106, சி.ஐ.எஸ்.எப் (CISF): 70, எஸ்.எஸ்.பி (SSB): 53, ஐ.டி.பி.பி (ITBP): 12 என மொத்தம் 349 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் (01.08.2026 தேதியின்படி). அரசு விதிமுறைப்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு ஜூலை 19, 2026 அன்று நடைபெறும். இதில் இரண்டு தாள்கள் (Paper I & II) இருக்கும்.  எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். இறுதி கட்டமாக ஆளுமைத் திறன் மற்றும் நேர்காணல் நடைபெறும்.

வேலை வாய்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 (பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது).

விண்ணப்பிக்கும் முறை: upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.03.2026 (மாலை 6 மணி வரை).

மத்திய அரசின் உயரிய அதிகாரமிக்க இந்தப் பணியில் சேர விரும்புவோர், காலதாமதம் செய்யாமல் இப்போதே விண்ணப்பிக்கத் தொடங்குவது நல்லது.