யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி!

 
yஉப் yஉப்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் பல்வேறு உயர் பதவிகளுக்கான மொத்தம் 933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

யுபிஎஸ்சி தேர்வு விடுமுறை மாணவர்கள் கல்லூரி

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்வில், பொது அறிவு வினாத்தாள் பலருக்கும் சவாலாகவும் கடினமாகவும் அமைந்ததாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில், திறனறித் தேர்வு  பெரும்பாலான தேர்வர்களால் எளிதாக எதிர்கொள்ளப்பட்டதாகத் தேர்வர்கள் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தற்போது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13,343 பேர் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இந்தத் தேர்வர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

யுபிஎஸ்சி

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in/ என்ற முகவரியில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள், அதற்கான விரிவான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த முதன்மைத் தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.