லாக்கப் டெத் நபரின் உடலைக் கூட காட்டாமல் அவசர போஸ்ட்மார்ட்டம்? உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
lock up

 

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி

இதுதொடர்பாக இன்று (நவம்பர் 14) அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவல் நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்ட பிறகும் காவல் மரணங்கள் தொடர்வதாக விமர்சித்துள்ளார்.

மேலும், “பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்தது ஏன்? 'பஞ்ச் டயலாக்' பேசி ஆட்சி நடத்தும் இந்த டம்மி முதலமைச்சர், மோசமான நிலையில் உள்ள சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி

பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் நீதி கோரி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.