தொடர் கனமழை... ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வுக் கூட்டம்!

 
முதல்வர் ஸ்டாலின்


 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர், அடுத்த 2 நாட்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கன மழை


புயல் சின்னம் உருவாகி இருப்பதன்  காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2  நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இதனையொட்டி  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை இவைகளை  தயார் நிலையில் வைத்திருக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web