சிறுநீர் பை முதல்.. குழந்தைகளின் டயப்பர்கள் வரை.. கசப்பான சம்பவங்களை பகிர்ந்த விமான பணிப்பெண்..!!

 
மரிகா மிகுசோவா

விமானப் பணிப்பெண் தான் பணியின் போது சந்தித்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

விமானப் பணிப்பெண் மரிகா மிகுசோவா தனது ‘டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்’ என்ற புத்தகத்தில் மிகவும் அருவருக்கத்தக்க சில விஷயங்களைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார். ஒருமுறை துருக்கி பயணத்தின் போது, ​​மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றதாக அவர் கூறினார். அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில், துப்புரவு பணியாளர்களும் ​​முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டனர். அந்தக் காலத்திலும் அப்படித்தான் நடந்தது. சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். ஏனெனில் முழுமையாக சுத்தம் செய்ய நேரமிருக்காது.

Breakdown: The science behind how airplanes fly in the sky

தொடர்ந்து தனது அனுபவங்களைப் பற்றி குறிப்பிட்ட மரிகா, ”இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை ஒரு பயணி இதை விட அதிகமாக சென்றார். நான் பயன்படுத்திய டவலைக் கேட்டதும், அவர் தர மறுத்து, அந்த டவலால் அக்குளை துடைக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த அசுத்தமான துண்டு என்னிடம் தரப்பட்டது. நான் முதலில் வாங்க தயங்கினேன், பின்னர் அந்த டவலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தேன்.

அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ​​ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கினார். சிறிது நேரம் காத்திருக்கும்படி அவர்களுக்கு சைகை காட்டினேன். ஒருவேளை மற்ற பயணிகளுக்கு அதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அந்த பெண் பிரச்சனை இல்லை, என் வேலை முடிந்தது, என்றாள்.

Diary of a Flight Attendant eBook : Mikusova, Marika: Amazon.in: Kindle  Store

ஆனால் அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள். சில நேரங்களில் பெற்றோர்கள் இருக்கை பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள். தங்களுடன் சக பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, இவ்வாறான விஷயங்களை அவர்கள் முற்றிலும் கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

From around the web