அமெரிக்காவில் ரூ.21 கோடி போலி நகைகள் பறிமுதல்: சுங்கத்துறை அதிரடி!

 
அமெரிக்கா

 அமெரிக்காவின் சின்சினாட்டி சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான 440 போலி டிசைனர் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த பார்சலைச் சோதனையிட்டபோது இந்தப் போலி நகைகள் சிக்கின.

US Customs seize 440 counterfeit luxury jewelry items valued at $2.4 million

இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள தனிநபர் முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்தப் பார்சலில், உலகப் புகழ்பெற்ற ஏழு சொகுசு பிராண்டுகளின் போலி முத்திரைகள் கொண்ட நகைகள் இருந்தன. அசல் நகைகளாக இருந்தால் இவற்றின் மதிப்பு 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Cincinnati Customs Officers Seize 440 Fake Designer Jewelry Pieces Worth Rs 21 Crore - The420

அறிவுசார் சொத்துரிமை மற்றும் சட்டவிரோத இறக்குமதிகளைத் தடுக்கக் கடுமையான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் ஷாப்பிங்கின்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனச் சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது