அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் விலை கடும் உயர்வு - அதிர்ச்சியில் ட்ரம்ப்!

 
அமெரிக்கா பெட்ரோல் அமெரிக்கா பெட்ரோல்

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான முக்கியக் கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் விளைவாக உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவில் வழக்கமாக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பெட்ரோல், தற்போது இந்தியப் பணத்தின் மதிப்புப்படி லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இன்று (நவம்பர் 19) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

போர் தொடங்குவதற்கு முன்பு பிப்ரவரி 28 வரை ஒரு கேலன் (சுமார் 3.7 லிட்டர்) பெட்ரோல் 2.98 டாலராக இருந்தது. டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கேலன் 3.76 டாலரிலிருந்து தற்போது 5.45 டாலராக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கப் பல்வேறு நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே ஏற்க மறுத்துவிட்டன. இது அமெரிக்காவுக்குப் பெரும் ராஜதந்திர பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டினால் அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், மக்கள் மத்தியில் ட்ரம்ப் அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருகிறது.

பெட்ரோல்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் உலகின் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழித்தடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளும் கடுமையான எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.