அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் சாதனை; 6 முக்கிய தலைவர்கள் வெற்றி!

 
அமெரிக்கா

 

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளனர். அமெரிக்க அரசியலில் “சமோசா காகஸ்” என அழைக்கப்படும் இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் ஆறு பேர் முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

US Midterm elections 2026: The Indian American vote may be small, but the political weight isn't - The Economic Times

வெர்ஜீனியாவின் 10-வது காங்கிரஸ் தொகுதியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்பிரமணியம் மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்கவைத்துள்ளார். புளோரிடாவின் 22-வது தொகுதியில் போட்டியிட்ட பியா தாண்டியா வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வாகியுள்ளார்.

கலிஃபோர்னியாவின் 17-வது தொகுதியில் ரோ கண்ணா, 3-வது தொகுதியில் அமி பேரா, வாஷிங்டனின் 7-வது தொகுதியில் பிரமிளா ஜெயபால் ஆகியோரும் மீண்டும் வெற்றி பெற்றதாகத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா

மேலும், மேரிலாந்து துணை ஆளுநர் அருணா மில்லர், ஆளுநர் வெஸ் மூருடன் இணைந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியினர் அமெரிக்க அரசியலில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.