அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது முச்சோவா - ஜாகுப் ஜோடி!

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முச்சோவா - ஜாகுப் ஜோடி

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் புதிய புள்ளி அடிப்படையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

செக் குடியரசின் கரோலினா முச்சோவா (Karolina Muchova) மற்றும் ஜாகுப் மென்சிக் ஜோடி இறுதிப் போட்டியில் களமிறங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் மற்றும் இத்தாலியின் பிளவியா கோபோலி இணையை 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அவர்கள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். இதன் மூலம் முச்சோவா - ஜாகுப் ஜோடி தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.