ஈரான் எண்ணெய் வர்த்தக விவகாரம்: 4 இந்தியர்கள், 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

 
trump

 

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவியதாகக் கூறி, இந்தியாவைச் சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 9 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

Two Mumbai-Based Firms, 5 Indian Nationals Face US Sanctions Over Iran Oil trade

அமெரிக்க நிதியமைச்சகத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), நவம்பர் 4-ம் தேதி இந்த நடவடிக்கையை அறிவித்தது. ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்ற கப்பல்கள் சர்வதேசக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் போலியான கப்பல் பதிவுகள், கொடிகள் மற்றும் கடல்சார் சான்றிதழ்களை வழங்கியதாக இந்தியாவைச் சேர்ந்த சுனில் குமார் சர்மா, அவரது மனைவி ஜஸ்ப்ரீத் ப்ரீத்தி ஷாஹித் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஓசியானிக் டெக்னாலஜிஸ் இந்தியா, ஆரியாவர்த் ஷிப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், அஷ்வானி குமார் திமான், இஷ்விந்தர் சிங் ஆகியோரும் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

US Warns Global Companies On Iran Trade: Why India's Rice, Tea, And Pharma Exports Face Fresh Shock | World News - The Indian Express

இந்த நடவடிக்கையால் அமெரிக்க அதிகார வரம்புக்குள் உள்ள சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்படுவதுடன், அமெரிக்க நிறுவனங்கள் அவர்களுடன் வர்த்தகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவை அமெரிக்க அரசின் குற்றச்சாட்டுகள்; குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதக்கூடாது.