ஈரான் மீது அமெரிக்கா கொடூர தாக்குதல் - 14 பேர் பலி; 78 பேர் காயம் - வளைகுடா நாடுகளில் ஈரான் எதிர்விளையாட்டு!

 
ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வார்சோன்  மீண்டும் உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஈரானின் முக்கியக் கடலோரப் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஃப்டெ

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான 'இர்னா' வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்கு ஈரானில் உள்ள முக்கிய நகரமான அஹ்வாஸின் வெளிவட்டப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்க நிகழ்வுகள் இன்று அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத் தலத்தில் நடைபெற்று வருகின்றன.

மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ள இந்த இறுதி ஊர்வல நாளிலும் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதால், ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவின் இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது புரட்சிகர காவல் படை மூலம் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

க்ட்க்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் தற்கொலைப்படை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் அவசரக்கால சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. குவைத் ராணுவம் தங்களை நோக்கி வந்த ஏவுகணைகளை வான்வழியிலேயே இடைமறித்து அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் மீண்டும் முழு வீச்சில் மோதத் தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.