மாணவனுடன் பாலியல் உறவு - அமெரிக்காவில் ஆசிரியைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!
Sep 3, 2026, 12:20 IST
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளியில் பணியாற்றிய 45 வயது ஆசிரியை ஒருவர், 15 வயது மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த அந்தப் பெண், தனது பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவனுடன் தவறான முறையில் பழகி வந்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஆசிரியைக்கும் அந்த மாணவருக்கும் இடையே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் (Messages) பரிமாறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததை அடுத்து, குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
