2026ன் முதல் 3 மாதங்களில் 414 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா - மத்திய அரசு தகவல்!

 
வெளிற்

2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தம் 588 இந்தியர்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

2026 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் மட்டும், சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 414 இந்தியர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 2023-இல் 617 ஆகவும், 2024-இல் 1,368 ஆகவும், 2025-இல் 2,025 ஆகவும் இருந்த இந்த எண்ணிக்கை, 2026-இன் முதல் கால் ஆண்டிலேயே 414-ஐ எட்டியுள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் 174 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

விசா சுற்றுலா விமானம்

ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக இங்கிலாந்து 57 இந்தியர்களையும், சைப்ரஸ் 53 இந்தியர்களையும் திருப்பி அனுப்பியுள்ளன. கிரீஸ் (10), துருக்கி (8), பிரான்ஸ் (6), இத்தாலி (5), ஜெர்மனி (4), ஸ்வீடன் (4), நெதர்லாந்து (4), பெல்ஜியம் (3), போர்ச்சுகல் (3), ருமேனியா (3), செர்பியா (3), லாட்வியா (3), டென்மார்க் (2), ஆஸ்திரியா (1) மற்றும் போலந்து (1) ஆகிய நாடுகளும் இந்தியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளன.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களைப் போலியான வழிகளில் அனுப்பி ஏமாற்றும் போலி முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மாநிலக் காவல்துறையின் மூலம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. eMigrate இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் சட்டவிரோதக் குடிபெயர்வின் ஆபத்துகள் குறித்தும், போலி வேலைவாய்ப்புச் சுழல்கள் குறித்தும் தொடர் விழிப்புணர்வு ஆலோசனைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.