"அமெரிக்கப் படைகள் சுறாக்களுக்கு இரையாகும்!"... பதிலடி கொடுக்கத் தயார் - ஈரான் எச்சரிக்கை!

 
ஈரான் போர் ஈரான் போர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு ஈரானின் மத்திய கதம் அல்-அன்பியாதலைமையகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஈரானின் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சி காவல் படை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச பிரிவான கதம் அல்-அன்பியா தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா தனது அச்சுறுத்தலின்படி பாரசீக வளைகுடா வழியாகத் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அந்தப் போரில் பங்கேற்கும் அமெரிக்கப் படைத் தளபதிகளும், வீரர்களும் பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு இரையாவார்கள்.

அமெரிக்கா ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் முக்கியத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகள் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிய ஊடகங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளன. அமெரிக்கப் படைகளைப் போர்க்களத்தில் இருந்து விலக்கி, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பொருளாதார மையங்களில் ஒளித்து வைத்துப் பாதுகாப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் அணு

ஈரானின் பல்கலைக்கழகங்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என நேற்று ஈரான் தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறி வந்தாலும், மறுபுறம் வான், கடல் மற்றும் தரை என முப்படை ரீதியாகவும் ஈரானை நெருக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கப் போவதாக அமெரிக்கா விடுத்து வரும் மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்க ஈரான் முழு அளவில் தயாராக உள்ளது.

ஈரானில் நாட்டைப் பாதுகாக்கும் வழக்கமான ராணுவத்துடன், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் மற்றும் எல்லையைப் பாதுகாக்கும் இஸ்லாமியப் புரட்சி காவல் படை மிக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விரு படைகளையும் ஒருங்கிணைக்கும் கதம் அல்-அன்பியா தலைமையகத்தின் இந்த அறிக்கை, மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரும் போர் மூளும் அபாயத்தை உணர்த்துகிறது.