ஈரான் வான்வழித் தாக்குதலில் அமெரிக்கப் போர் விமானங்கள் சேதம்!
Sep 13, 2026, 08:25 IST
ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவின் முக்கியப் போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன. ஜோர்டானில் அமைந்துள்ள முவாபக் சால்டி விமான தளத்தை குறிவைத்து ஈரான் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், எட்டு எப்-15 ரகப் போர் விமானங்களும் லேசான அளவில் சேதத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும், அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே இது போன்ற மோதல்களும் தாக்குதல்களும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
