அமெரிக்காவில் நெடுஞ்சாலை வடிகால் குழியில் விழுந்த குதிரை... வைரல் வீடியோ!

 
குதிரை

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிளானோ நகரில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஆழமான வடிகால் குழியில் தவறி விழுந்த குதிரையைத் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

 

கடந்த சனிக்கிழமை அதிகாலையில், நெடுஞ்சாலை 121 அருகே ஓடிவந்த குதிரை ஒன்று திடீரென மிரண்டு, குறுகலான கான்கிரீட் வடிகால் குழிக்குள் விழுந்தது. அதனால் தானாக வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், குதிரை பதற்றமடையாமல் இருக்க கால்நடை மருத்துவர் மூலம் லேசான மயக்க மருந்து செலுத்தினர்.

 Plano firefighters rescue escaped horse from drainage ditch

பின்னர் தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி குதிரையின் உடலைப் பாதுகாப்பாகப் பிணைத்து, வின்ச் எனப்படும் கனரக இழுவை இயந்திரத்தின் உதவியுடன் மேலே தூக்கினர். குதிரைக்கு லேசான கீறல்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், மீட்கப்பட்ட பிறகு அது எழுந்து நடமாடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்