அமெரிக்க துணை ஜனாதிபதி மனைவி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது கைக்குழந்தையுடன் தடுமாற்றம்... வைரல் வீடியோ!

 
உஷா வான்ஸ்

 

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்சின் மனைவி உஷா வான்ஸ், கைக்குழந்தையுடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது திடீரென நிலைதடுமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உஷா வான்ஸ் தனது பிறந்து சில வாரங்களே ஆன மகன் அலெக் நீல் வான்ஸை குழந்தை கேரியரில் மார்பில் சுமந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கினார்.

அப்போது படிக்கட்டில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக அவரது கால் தடுமாறியது. இதனால் அவர் கீழே விழும் நிலைக்கு சென்றார். உடனடியாக அருகில் இருந்த கைப்பிடியை பிடித்துக்கொண்டு உஷா வான்ஸ் சுதாரித்துக் கொண்டார். பின்னர் குழந்தையை பத்திரமாக கவனித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.

இந்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உஷா வான்ஸ் தடுமாறியபோது அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் நகராமல் இருந்தது குறித்தும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேநேரத்தில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்கள் குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம் என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதனால் இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வீரர்கள் தவறு செய்ததாக உறுதியாக கூற முடியாது.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா - வைரல் வீடியோ

இந்த சம்பவத்தின்போது உஷா வான்ஸுக்கும் அவரது குழந்தைக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அவர் இயல்பாக இருந்ததுடன், குழந்தையை கவனித்தபடி அங்கிருந்து சென்றார்.ஜேடி வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அலாஸ்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.