உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏவுக்கு இன்று முதல் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 
உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ. விஜய்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியின் தமிழக வெற்றித் கழக சட்டமன்ற உறுப்பினர் விஜய்க்கு (விஜய் மகாலிங்கம்) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த மனுவை ஏற்று, இன்று முதல் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய்யின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கோரப்பட்ட மனுவின் அடிப்படையில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ

அண்மையில் சட்டப்பேரவையில் அவர் பேசிய பேச்சுக்கு எழுந்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே, தற்போது இந்தத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் கோட்டையாகவும், சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பின்னணியும் கொண்ட உசிலம்பட்டி தொகுதியில், கடந்த தேர்தலில் தமிழக வெற்றித் கழகம் சார்பாகப் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.