தீவிரமடையும் அமெரிக்க - ஈரான் போர்: நாளை பாகிஸ்தான் செல்லும் அமெரிக்க குழு!

 
பாகிஸ்தான் ஈரான் அமெரிக்கா பாகிஸ்தான் ஈரான் அமெரிக்கா

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காகத் தனது நம்பிக்கைக்குரிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவை நாளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்தச் சமாதான முயற்சியை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது 'எக்ஸ்' பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். "அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், லெபனான் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாகப் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எட்ட ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்த இரு நாடுகளின் தலைமைகளுக்கும் எனது நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். இவருடன்: ஜனாதிபதி டிரம்பின் மருமகனும் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரான்

இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தவும், இறுதியான உடன்படிக்கையை எட்டவும் இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதியை அடைவதில் வெற்றிபெறும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்" என்று பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வரும் சூழலில், இந்த அமைதி முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.