உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: டெம்போ மீது ஆம்புலன்ஸ் மோதி 5 பேர் பரிதாப பலி... அதிர்ச்சி வீடியோ!

 
உபி

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உயிரிழந்த நபரின் உடலை உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூருக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்துள்ளனர். அந்த ஆம்புலன்சில் 3 உறவினர்கள் மற்றும் 2 ஓட்டுநர்கள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டம் காராவங் கிராமம் அருகே பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டெம்போ மீது ஆம்புலன்ஸ் வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர மோதலில் ஆம்புலன்சில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 5 பேரும் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.