பிரபல குற்றவாளி நசீம் துர்ரானி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

 
நசீம்

 

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில், டெல்லி போலீசார் மற்றும் நொய்டா சிறப்பு அதிரடிப் படையினர் (எஸ்டிஎஃப்) இணைந்து நடத்திய என்கவுண்டரில் பிரபல குற்றவாளி நசீம் துர்ரானி சுட்டுக்கொல்லப்பட்டான்.

D Company-linked gangster Naseem Durrani shot dead in an encounter in UP's Bulandshahr - India Today

ரூ.50 ஆயிரம் பரிசு அறிவிப்பு

டெல்லி அமைச்சர் கபில் மிஷ்ராவின் அலுவலகத்திற்கு வெளியே சமீர் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நசீம் துர்ரானி தேடப்பட்டு வந்தான். அவனைப் பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நிழல் உலக தாதா சோட்டா ராஜனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் நசீம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன.

Gangster Naseem Durrani: Dawood-linked criminal shot dead in UP encounter

கூட்டு நடவடிக்கையில் என்கவுண்டர்

நசீம் துர்ரானி பதுங்கியிருக்கும் இடம் குறித்து உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் டெல்லி போலீசாரும் நொய்டா எஸ்டிஎஃப் படையினரும் இணைந்து புலந்த்ஷாஹரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நசீம் துர்ரானி சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.