ஹேண்ட் பம்ப்பில் தண்ணீருக்குப் பதில் வந்த சாராயம்... அதிர்ச்சி வீடியோ!
Nov 24, 2026, 14:00 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடு ஒன்றில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஹேண்ட் பம்ப்பை இயக்கியபோது தண்ணீருக்குப் பதில் சாராயம் வந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நடத்தப்பட்ட ஆய்வில், ஹேண்ட் பம்பிற்கு கீழே ரகசியத் தொட்டி அமைத்து அதில் பெருமளவு கள்ளச்சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், இனிமேல் மது அருந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம், இந்த வீட்டுக் குழாயைத் திறந்தாலே போதும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
