மசூதியில் தொழுகை செய்தபோது திடீர் மயக்கம்… 42 வயது நபர் உயிரிழப்பு!

 
up

உத்தரபிரதேச மாநிலத்தில் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மயங்கி விழுந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம், புட்டாஹேடா கிராமத்தைச் சேர்ந்தவர் சராபத் அலி (42). கூலித் தொழிலாளியான இவர், தனது கிராமத்தில் உள்ள மசூதிக்குத் தொழுகை செய்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொழுகையின்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.