திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
இளம்பெண் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், கணவர் வேலைக்காக சென்னையில் இருக்கும் நிலையில், திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் வராண்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிர்சாபூர் மாவட்டம் ஹாலியா காவல் எல்லைக்கு உட்பட்ட சுபான் காலா கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், நேற்று இரவு தனது வீட்டின் வராண்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பள்ளி மானவி தற்கொலை

இரவு சித்தியைக் காணாததால் தேடி வந்த அவரது அக்காவின் மகள், வராண்டாவில் சித்தி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுப் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் திருமணமான அடுத்த வாரமே வேலை நிமித்தமாகச் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்து வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹாலியா காவல்துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் மர்மக் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.