பாஜக எம்பி கூட்டணி கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் மோதல்... சர்ச்சை வீடியோ!

 
up

 

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்தநகரில் ரூ.19.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சுகாதார மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் மற்றும் அப்னா தளம் (எஸ்) எம்எல்ஏ வினய் வர்மா ஆகியோரின் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டு மேடையில் கைகலப்பு நிகழ்ந்தது.

விழாவின் போது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதும், எம்பியின் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாரும் இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.இதையடுத்து, எம்பி ஜெகதாம்பிகா பால் மற்றும் எம்எல்ஏ வினய் வர்மா ஆகிய இரு தலைவர்களின் முன்னிலையிலும் பூமிபூஜை நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.