கேரளாவின் முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு... 11 நாள் இழுபறிக்கு முற்றுப்புள்ளி - யார் இந்த சதீஷன்?!

 
கேரளா முதலமைச்சர் வி.டி.சதீஷன் கேரளா முதலமைச்சர் வி.டி.சதீஷன்

கேரள மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக மூத்த காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீஷன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சிக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை அமைக்கவுள்ளது.

புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி.சதீஷன், கேரள அரசியலில் நன்கு அறிமுகமான முகம்.  கடந்த பினராயி விஜயன் ஆட்சியின் போது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டு, அரசின் குறைகளை ஆக்கப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியவர். பரவூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் இவர், காங்கிரஸின் கொள்கை ரீதியான மற்றும் நிதானமான தலைவராகக் கருதப்படுகிறார்.

கேரள சட்டமன்றம் கேரளா கேரளம்

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போவது யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. கே.சி.வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரின் பெயர்கள் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருந்தன. 11 நாட்கள் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இளைஞர்கள் மற்றும் நடுநிலைத் தொண்டர்களின் ஆதரவைப் பெற்றுள்ள வி.டி.சதீஷனையே முதலமைச்சராக்க ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

கேரளா

முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு, புதிய அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட மிக முக்கியமான அமைச்சகப் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷன் பொறுப்பேற்க உள்ளது அம்மாநில அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.