"வாடி ராசாத்தி".. மகளிர் தினத்தில் வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தமிழகப் பெண்களின் முன்னேற்றத்தை விளக்கும் வகையில் "வாடி ராசாத்தி" என்ற பாடலுடன் கூடிய சிறப்புத் தொகுப்பு வீடியோவைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார். "வெல்லும் தமிழ்ப் பெண்களே... நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது!" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்களே...
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 8, 2026
நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின்… pic.twitter.com/YGyJFVRWiJ
பெண்கள் தங்களது பாதையில் உள்ள தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், அவர்களின் ஒவ்வொரு அடியிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம். தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதன் மூலம் தாய்மார்களின் சுமையைக் குறைக்கும் திட்டம். 'விடியல் பயணம்' திட்டத்தின் மூலம் பணிக்குச் செல்லும் பெண்களின் போக்குவரத்துச் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் பயனாகத் தமிழகத்தில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
