2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்.. சென்னையில் தீவிரம்!

 
தெரு நாய்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் "வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை" என்ற இலக்கை அடையும் வகையில், கடந்த ஆகஸ்ட் 11-ந்தேதி முதல் மாபெரும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மூன்று மண்டலங்களில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இம்முகாமின் மூலம், கடந்த 8 நாட்களில் மட்டும் மொத்தம் 22,158 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாய் தெருநாய் வெறிநாய்

ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 10 குழுக்கள் வீதம் நியமிக்கப்பட்டு, அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களிலும் உள்ள நாய்களுக்குத் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்ததும் சென்னையின் மற்ற மண்டலங்களுக்கும் இப்பணி விரிவுபடுத்தப்படவுள்ளது. பொதுமக்களும் செல்லப்பிராணி உரிமையாளர்களும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.