இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

 
இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் வேகமெடுக்க துவங்கியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு நாளடைவில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. தற்போது நாட்டில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் முதற்கட்ட தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. தற்போது நாட்டில் கொரோனாவிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

தற்போது 3வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது. தடுப்பூசியை விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

From around the web