ஐபிஎல் ஒரே சீசனில் 5 விருதுகளை அள்ளி உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

 
ஐபிஎல்  வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்  வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த 2026 ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 5 முக்கிய தனிநபர் விருதுகளை வென்று, ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனைப் பக்கத்தை எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியிருந்தாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5 முக்கிய தனிநபர் விருதுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பிரம்மாண்டப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் வைபவ் சூர்யவன்ஷி

தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த தொடரையும் ஆதிக்கம் செலுத்திய சூர்யவன்ஷிக்கு ஆரஞ்சு கேப் (Orange Cap) - தொடரில் அதிக ரன்கள் குவித்தவர். அதிக மதிப்புமிக்க வீரர் (MVP - Most Valuable Player) - தொடரின் நாயகன். வளர்ந்து வரும் சிறந்த வீரர் (Emerging Player of the Season). சீசனின் சூப்பர் ஸ்டிரைக்கர் (Super Striker of the Season). சீசனின் சூப்பர் சிக்ஸர் (Super Sixes Award)

இந்த சீசனில் மொத்தம் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய சூர்யவன்ஷி, 776 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். குறிப்பாக, டி20 கிரிக்கெட்டில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் 237.30 என்ற ‘ஸ்டிரைக் ரேட்’டில்  அவர் ரன்களைக் குவித்தார்.

மேலும், இந்த ஒரே சீசனில் மட்டும் அவர் 72 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதன் மூலம், இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஒரே சீசனில் 59 சிக்ஸர்கள் அடித்திருந்த வரலாற்றுச் சாதனையை, தனது 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி தகர்த்தெறிந்துள்ளார்.

சர்வதேச ஜாம்பவான்களே வியந்து பார்க்கும் வகையில், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.