தஞ்சை பெரிய கோவிலில் சிவபுராணம் பாடி நெகிழ வைத்த வைகோ!

 
தஞ்சை பெரிய வைகோ

கோவிலில் அர்ச்சனை செய்வதற்காகத் தனது பெயர் மற்றும் ராசியைக் கேட்டவர்களிடம், "தேவாரம், திருவாசகம் தெரியாதா?" எனக் கேள்வி எழுப்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அங்கேயே சிவபுராணத்தின் தொடக்க வரிகளை உருக்கமாகப் பாடித் தனது தமிழ் மற்றும் ஆன்மீக ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். இச்சம்பவம் கோவிலில் இருந்த பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

கோவிலுக்குச் சென்றிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், அர்ச்சனை செய்வதற்காக அங்கிருந்தவர்கள் அவரது பெயர் மற்றும் நட்சத்திரம், ராசி விவரங்களைக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்த வைகோ, அவர்களிடம் "தேவாரம் மற்றும் திருவாசகம் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

வைகோ அழைப்பு

தொடர்ந்து அங்கேயே நின்றவாறு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பகுதியான சிவபுராணத்தின் “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க...” உள்ளிட்ட தொடக்க வரிகளைத் தனது கணீர்க் குரலில் உருக்கமாகப் பாடினார்.

அரசியல் மேடைகளில் உணர்ச்சிப்பூர்வமாக முழங்கும் வைகோ, கோவில் வளாகத்தில் தமிழ் மறைகளான சிவபுராணப் பாடல்களை மனப்பாடமாகவும் உருக்கமாகவும் பாடியதைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.