வைஷ்ணவிக்கு திமுகவில் பெரிய பொறுப்பு.. செந்தில்பாலாஜியும் ஆதரவு: பின்னணியும் அரசியல் கணக்குகளும்!
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சோஷியல் மீடியா பிரபலம் வைஷ்ணவிக்கு, திமுக மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தொடக்க காலத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டு மிகவும் பிரபலமானவர். தவெக மாவட்டச் செயலாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவின் கொள்கைகளைப் பேசி, தவெகவை விமர்சித்து அவர் ஆற்றிய உரைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின.

திமுகவில் இளைஞர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் கட்சியின் கொள்கைகளைத் தீவிரமாக முன்வைப்போருக்கும் முன்னுரிமை அளித்து பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. கோவையில் வைஷ்ணவியை திமுகவில் இணைத்ததில் முக்கியப் பங்காற்றியவர் செந்தில் பாலாஜி. அவருக்குச் செந்தில் பாலாஜியின் முழு ஆதரவு இருப்பதால் மாணவரணி பொறுப்பு வழங்குவதில் எவ்விதத் தேக்கமும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவருக்கு உடனடியாக முக்கியப் பொறுப்பு வழங்வதா என்ற விமர்சனங்கள் சில மூத்த நிர்வாகிகளிடையே எழுந்தாலும், வைஷ்ணவி தவெகவிலேயே தொடர்ந்து இருந்தால் எம்.எல்.ஏ-வாகக் கூட ஆகியிருப்பார் என்ற பேச்சுக்கள் கட்சியின் ஒரு தரப்பினரிடையே உள்ளது. எனவே, இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் விரைவில் அவருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
