சந்திக்க மறுத்த இயக்குனர்... வீடியோவில் கதறிக் கதறி அழுத காமெடி நடிகர் வையாபுரி!
தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் காமெடி நடிகர் வையாபுரி ஆவார். விஜய் மற்றும் அஜித் போன்ற பல பிரபல நடிகர்களின் படங்களில் நடித்து இவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களிடம் மேலும் பரிச்சயம் ஆனார்.
சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது பயணத்தைத் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கி அதில் பல விஷயங்களைப் பகிர்ந்து வந்தார். குறைந்த நாட்களிலேயே இவரின் பக்கத்தை ஒரு லட்சம் பின்தொடர்பவர்கள் பின்தொடர்ந்து சாதனை படைத்துள்ளனர்.
இதற்காக அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிப் பேசி உள்ளார். ஒரு புரொடக்ஷ்ன் மேனேஜர் அழைத்ததால் இயக்குனர் ஒருவரைச் சந்திக்கச் சென்றதாகவும் பழைய ஆள் என்பதால் தன்னைச் சந்திக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு மட்டுமே இன்றைய இயக்குநர்கள் முக்கியத்துவம் தருவது தமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
