பெண்ணைக் கொன்று நகைக் கொள்ளை: போலீசாருடன் சேர்ந்து நாடகமாடிய தற்காலிக ஊழியர்
Oct 20, 2026, 12:06 IST
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிக் கொலை செய்துவிட்டு, நகைகளைக் கொள்ளையடித்ததாக தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக தற்காலிக ஊழியர் அறிவுமணியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணைக் கொலை செய்த பிறகு, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க அறிவுமணி காவல்துறையினருடன் இணைந்து குற்றவாளியைத் தேடுவது போல் நாடகமாடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
