"ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் உதயநிதி திருந்தலை” - வானதி சீனிவாசன்!

 
உதயநிதி உதயநிதி

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி ஸ்டாலின் திருந்தவில்லை, மக்கள் அவர்களைத் திருத்தும் காலம் விரைவில் வரும்" என்று அவர் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, இந்த அரசியல் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

வானதி சீனிவாசன்

புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற தனது கருத்தை மீண்டும் பதிவு செய்ததே இந்த விமர்சனங்களுக்கு முக்கியக் காரணமாகியுள்ளது. "இந்து மதத்தை ஒழிப்பதுதான் திமுகவின் கொள்கை என்றால், அதை ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை?" என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலின் போது ஒரு முகத்தையும், தோல்விக்குப் பிறகு மற்றொரு முகத்தையும் திமுக காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் வானதி

முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், சிறுபான்மையினர் வாக்குகள் இனி திமுகவுக்குக் கிடைக்காது என்கிற அச்சத்தாலேயே உதயநிதி இவ்வாறு பேசுவதாக வானதி குறிப்பிட்டுள்ளார். "இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல என்று தேர்தல் நேரத்தில் நாடகமாடியவர்களை மக்கள் புரிந்துகொண்டுதான் ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தினர்" என்று அவர் கூறினார். எஞ்சியுள்ள வாக்கு வங்கியைத் தக்கவைக்கவே திமுக மீண்டும் இந்து எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.