பள்ளி நிகழ்ச்சியில் அம்மன் வேஷம்... மேடையிலேறி திடீரென சாமியாடிய பெற்றோர்கள்!

 
 வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்துள்ளது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும், பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். விழாவில் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. அப்போது மாணவி ஒருவர் சாமி பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

வந்தவாசி: ஊ.ஒ.கி.தொ.பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில்  வரவேற்ற மாணவ மாணவிகள்|Inshorts

அந்த மாணவி ஆதி பராசக்தி வேடமணிந்து, கையில் திரிசூலத்துடன் ஆவேசத்துடன்  நடனமாட, அவரை சுற்றிலும் வேப்பிலைகளுடன் மற்ற மாணவிகளும் நடனமாடினார்கள். அப்போது உடுக்கை சத்தத்துடன், பாட்டு சத்தம் அரங்கை அதிர வைத்தது. இந்த நடனத்தை பெற்றோர்கள் அனைவரும் மெய்சிலிர்க்க  பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ​​முன் வரிசையில் அமர்ந்திருந்த  பெண் ஒருவர் சாமி வந்து ஆட ஆரம்பித்தார்ர். அப்போது, ​​அவர் ஒரு  ஆரத்தி தட்டில் கற்பூரம் ஏற்றி, தட்டுடன் மேடையில் சாமியாடினார்.

Amazing incident in Tiruvannamalai and what happened in Thiruvannamalai Vandavasi Government School

இதை பார்த்த ஆதிபராசக்தி வேடமணிந்த மாணவி அந்த பெண்ணுடன் சேர்ந்து மேடையில் சுற்றி சுற்றி நடனமாடினார். இறுதியாக அங்கிருந்த அனைவருக்கும் ஆரத்தி செய்து நெற்றியில் குங்குமம் இட்டுள்ளார் அந்த பெண். பெற்றோரின் இந்த சாமியாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

 

.

From around the web