வந்தே பாரத் ரயில் வடையில் உலோக போல்ட்... கதறும் பயணி... அதிர்ச்சி வீடியோ!

 
வந்தே பாரத்

 

பெங்களூருவில் இருந்து பெலகாவி நோக்கிச் சென்ற வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்த சமர்த் கோடியால் என்பவருக்கு வழங்கப்பட்ட காலை உணவில் இருந்த வடைக்குள் பெரிய உலோக போல்ட் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடையைச் சாப்பிட முயன்றபோது கடினமாக இருந்ததால் கவனித்தபோது, உள்ளே உலோக போல்ட் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உணவு மற்றும் உலோக போல்ட்டின் புகைப்படங்களையும் வீடியோவையும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், ரயில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியதுடன் ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Vande Bharat serves vada with a metal bolt hidden inside as complimentary snack, passenger travelling on Bengaluru-Belagavi train gets a shock; caterer faces strict action - The Economic Times

இந்தப் பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பயணியின் புகாருக்குப் பதிலளித்த ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் சமையல் தொடங்கும் முன் உபகரணங்களை முறையாகச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.